
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் வைத்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, புதுக்கோட்டைக்கு திருமாவளவன் சென்று அம்பேத்கர் சிலை திறந்து வைத்த உதயநிதி வேங்கை வயல் பக்கம் சென்றிருக்கலாம்.
அரக்கோணம் பெண்மணிக்கு நடந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அரசியலுக்காக தான் முதல்வர் டெல்லி சென்றுள்ளார் என்று மக்கள் எண்ணி கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முன்பு நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று இருந்தால் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். ஆட்சி முடியும் தருவாயில் தான் முதலமைச்சர் டெல்லிக்கு சென்றுள்ளார். பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு வர வேண்டியது. ஆனால் அந்த நிறுவனம் உத்தரப்பிரதேசத்திற்கு சென்றுள்ளது.
இந்த அரசாங்கம் தமிழகத்தை பின்னோக்கி இழுத்து சென்றுள்ளது. திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கூட்டணியாக அதிமுக பாஜக கூட்டணி உள்ளது. யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் மிரட்டவும் அவசியமில்லை என எல்.முருகன் கூறியுள்ளார்.