
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் “குபேரா” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் அவரது 51வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தினை இயக்குனர் சேகர் கம்முலா இயக்கியுள்ள நிலையில், ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகர்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் “போய்வா நண்பா” என்ற பாடல் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. டீசரில் கிரைம் திரில்லர் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல நிறுவனமான அமேசான் ப்ரைம் “குபேரா” திரைப்படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியுள்ளது.