திருப்பூர் மாவட்டம் முருகம்பாளையம் கிருஷ்ணா நகரில் ஹிமாலயா என்ற பெயரில் மருந்து கடை ஒன்று அமைந்துள்ளது. அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவையின் அடிப்படையில் திருப்பூர் இணை இயக்குனர் தலைமையில் அந்த மருந்து கடையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மருந்து கடை உரிமையாளரான ஜோலி அகஸ்டின் என்பவர் கடையின் உள்ளே இரண்டு கட்டில்கள் போட்டு அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அகஸ்டினை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அகஸ்டின் 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார் எனவும் கடந்த 18 வருடங்களாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கு முன்பு கடந்த 2017-ஆம் ஆண்டும், 2024-ம் ஆண்டு அகஸ்டின் போலி மருத்துவம் பார்த்ததற்காக கைது செய்யப்பட்டார். இப்போது மூன்றாவது முறையாகவும் அகஸ்டின் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து அகஸ்டின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். மெடிக்கல் என்ற பெயரில் போலி மருத்துவம் பார்த்து வந்த கடைக்கு சீல் வைக்குமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.