சென்னை மாவட்டம் ஆம்பூர் அருகே அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஒரு பைக் வந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி அரிசி மூட்டையுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரிசி மூட்டைகள் கீழே விழுந்தது.

சம்பவ இடத்திலிருந்த ஒருவரும், லாரி ஓட்டுனரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன் பிறகு விபத்தில் சிக்கிய லாரி கிரேன் மூலம் மீட்கப்பட்டது.