
சென்னை மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க 11-ம் வகுப்பு மாணவன், பள்ளி விடுமுறை என்பதால் தண்ணீர் கேன் போடும் வேலை பார்த்து வந்துள்ளார்.
இன்று காலை தண்ணீர் கேன் போடும் வேலையில் இருந்த போது சிறுவனை ஐந்து பேர் சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து போலீசார் சிறுவனை கத்தியால் வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.