பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது. யாரும் நன்கொடை வழங்க வேண்டாம் என மகாவிஷ்ணு கூறியுள்ளார். அவர் கூறியதாவது, பரம்பொருள் அறக்கட்டளை இனி இயங்காது என அறிவிப்பதில் நிம்மதி. எனக்கு எந்தவித வேதனையும் கொண்ட முடிவாக இது இல்லை. சொந்த ஆன்மீக வளர்ச்சியை கருத்தில் கொண்டு தெளிவான தீர்மானம் எடுத்துள்ளேன்.

இப்போது தான் ஒரு புதிய புள்ளியை அடைந்திருக்கிறேன். எனது ஆன்மீகப் பணியை வேறு வகையில் தொடர் உள்ளேன் என கூறியுள்ளார். மகாவிஷ்ணு மாற்றுத் திறனாளிகள் குறித்தும் முன் ஜென்ம பயன் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.