
1916ம் ஆண்டு மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் தொடங்கிய பாரம்பரியமான மைசூர் சந்தன சோப்பிற்கு, தற்போது பாலிவுட் நடிகை தமன்னா பாட்டியாவை பிராண்ட் தூதராக நியமித்துள்ளதை தொடர்ந்து, கர்நாடகாவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கர்நாடக அரசு மற்றும் அதன் கட்டுப்பாட்டில் செயல்படும் KSDL நிறுவனம், தமன்னாவுடன் ரூ.6.2 கோடிக்கான இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த முடிவை எதிர்க்கும் கன்னட அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, “இந்தியாவின் கலாச்சார அடையாளமான மைசூர் சோப்பை ஒரு கன்னட நடிகை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்” என வலியுறுத்துகின்றனர்.
ಮೈಸೂರು ಸೋಪ್ಸ್ ಮತ್ತು ಡಿಟರ್ಜೆಂಟ್ಸ್ ಲಿಮಿಟೆಡ್ ತನ್ನ ಬ್ರಾಂಡ್ ಅಂಬಾಸೆಡರ್ ಆಗಿ ಬಾಲಿವುಡ್ ನಟಿ ತಮನ್ನಾ ಭಾಟಿಯಾ ಅವರನ್ನು 6.2 ಕೋಟಿ ರೂಪಾಯಿ ತೆತ್ತು ನೇಮಕ ಮಾಡಿರುವುದು ಅವಿವೇಕದ, ಅಸಂಬದ್ಧ, ಅನೈತಿಕ, ಬೇಜವಾಬ್ದಾರಿಯುತ ತೀರ್ಮಾನವಾಗಿದೆ.
ಮೈಸೂರು ಸೋಪ್ಸ್ ಸಂಸ್ಥೆ ಕರ್ನಾಟಕ ಸರ್ಕಾರದ ಸ್ವಾಮ್ಯದ ಕಂಪನಿ. 1916ರಲ್ಲಿ ಮೈಸೂರು ಸಂಸ್ಥಾನದ… pic.twitter.com/iIhvo9oTla
— ನಾರಾಯಣಗೌಡ್ರು.ಟಿ.ಎ | Narayanagowdru T.A. (@narayanagowdru) May 22, 2025
கர்நாடக பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் நாராயண கவுட்ரு, முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தைரியமாக பேசும், திறமையுள்ள கன்னட நடிகைகளை புறக்கணித்து பாலிவுட் நடிகையை தேர்ந்தெடுத்தது, கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ₹6.2 கோடியை கல்வி, வேலைவாய்ப்பு போன்ற பொதுநலத்திற்கான திட்டங்களில் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல், “தமன்னா பாட்டியா அகில இந்திய பிரபலம்தான்;
அவருடைய சமூக ஊடக பின்தொடர்வோரின் எண்ணிக்கை, மார்க்கெட்டிங் திறன் மற்றும் செலவு-செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்” என தெரிவித்துள்ளார்.
மைசூர் சந்தன சோப்பை தேசியம் மட்டுமல்லாது, உலகளாவிய ரீதியாக விரிவுபடுத்துவதே அரசின் நோக்கம் எனவும் கூறியுள்ளார். 2028க்குள் ₹5,000 கோடி வருமானம் ஈட்டும் இலக்கை நோக்கி நிறுவனம் நகர்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.