
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்களின் வாழ்வதரத்தை உயர்த்தும் நோக்குடன் நடைபெற்று வருகிறது. இதன் கீழ், மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த திட்டம் ஜூன் 4ஆம் தேதி முதல் புதிய பயனாளிகளுக்காக மீண்டும் விண்ணப்பிக்க ஏதுவாக விரிவாக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிதாக விண்ணப்பிப்பவர்களுக்காக ஜூன் 4-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 9000 சிறப்பு முகாம்கள் நடைபெறும் நிலையில் 29ஆம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தற்போது மகளிர் உரிமை தொகைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை தெரிவித்து பார்ப்போம்.
அதன்படி, ஏற்கனவே விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள், இதுவரை திட்டத்திற்கு விண்ணப்பிக்காதவர்கள் இவர்கள் இருவரும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு பெறுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
விண்ணப்பிக்க தேவையான 3 முக்கிய ஆவணங்கள்:1. குடும்ப அட்டை (ரேஷன் கார்டு):
திட்டத்திற்கு விண்ணப்பிக்க இது மிக அவசியம். குடும்ப அட்டையில் பெயர் தவறாக இருந்தால் முன்கூட்டியே திருத்தம் செய்துவைக்க வேண்டும்.
2. வங்கி கணக்கு:
விண்ணப்பிப்பவரின் பெயரில் செயல்படும் வங்கி கணக்கு இருக்க வேண்டும். அதற்கான பாஸ்புக் நகல் அவசியம். nominee பெயர் தவறு, அல்லது கணக்கு செயலிழந்திருந்தால் புதுப்பிக்க வேண்டும்.
3. ஆதார் கார்டு:
அடையாளத்தை உறுதிப்படுத்தும் முக்கிய ஆவணம்.
மற்ற ஆதரவு ஆவணங்கள்:
வாக்காளர் அடையாள அட்டை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு பதிவு அடையாள அட்டை.
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
முக்கியக் குறிப்புகள்:
அனைத்து ஆவணங்களும் முறையாக தயாராக இருக்க வேண்டும்
முகாம்களில் வரிசை தவிர, ஆவணங்கள் சரிவர இல்லையெனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்
எளிதாகப் பயனடைய, முன் ஏற்பாடு செய்தல் அவசியம்.
மேலும் இந்த முக்கிய தகவலை, உங்கள் சுற்றத்தாருக்கும் பகிருங்கள். திட்ட நன்மையை தெரிந்து கொண்டு, நிதி உதவியை பெற்று பயன் பெறுங்கள்.