கோடைக்காலத்தின் இன்பமூட்டும் பழமான தர்பூசணி, தண்ணீர் அதிகம் கொண்டதும், குளிர்ச்சியை தருவதாலும் பெரும்பாலானோருக்கு பிடித்தது. வழக்கமாக இதனை ஜூஸ் அல்லது குளிர்ந்த துண்டுகளாகவே சாப்பிடுவோம். ஆனால் சமீபத்தில் சமூக வலைதளங்களில் பதிவாகி வைரலாகி வரும் ஒரு வீடியோ, தர்பூசணியை முற்றிலும் வித்தியாசமான முறையில் பயன்படுத்தியிருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Instamart (@instamart)

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வெளியிட்ட இந்த ரீலில், தர்பூசணி துண்டுகள் பீட்சா, மசாலா தோசை, சேவ் நம்கீன், மற்றும் ஆச்சரியமாக ஒரு கப் தேனீரில் வைத்து சாப்பிடப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. “இதை ஒரு தர்பூசணி பிரியருக்கு அனுப்பு” என்ற தலைப்புடன் வெளியான இந்த ரீல், பார்த்தவர்களை குழப்பமும், சிரிப்பும், சிலருக்கு கோபமுமாக மாற்றியுள்ளது.

நெட்டிசன்களின் ரியாக்‌ஷன்கள் கலவையானவையாக இருந்தன. சிலர் “பீட்சாவில் அன்னாசிப்பழம் சேர்ந்தாலுமே சரிதான்… தர்பூசணி கூடச் சேரலாம்!” என நகைச்சுவையாகக் கருத்து தெரிவித்தனர்.

இந்த வீடியோ மே மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டு தற்போது வரை 1.7 லட்சம் பார்வைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பங்கள் பெற்று, விரைவாக வைரலாகி வருகிறது. உண்மையில் இது ஒரு விளம்பர யுக்தியாக இருந்தாலும், தர்பூசணி ரசிப்பவர்களுக்கு இது ஒரு “food insult” போலவே இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.