இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் என்றால் மிகவும் ஆச்சரியமானதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது ஆந்திர மாநிலத்தில் உள்ள நல்லமலா மலைகளில் வனப்பகுதி இருக்கிறது. இங்கு ஒரு கரடி புதிதாக குட்டியை ஈன்றதாக கூறப்படும் நிலையில் அந்த குட்டியை ஒரு புலி வெளியே தூக்கி சென்றது. இதனை பார்த்த தாய் கரடி தன்னுடைய குட்டியை காப்பாற்றுவதற்காக நேருக்கு நேர் அந்த புலியுடன் சண்டை போட்டது.

இந்த சம்பவத்தை வனப்பகுதியில் ரோந்து சென்றவர்கள் வீடியோவாக பதிவு செய்த நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.