சீனாவின் அன்ஹுய் மாகாணம் ஃபெங்யாங் பகுதியில் அமைந்துள்ள 650 ஆண்டு பழமையான டிரம் கோபுரம் திங்கள்கிழமை பகுதியளவில் இடிந்து விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1375ஆம் ஆண்டு மிங் வம்சத்தின் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோபுரத்தின் கூரை ஓடுகள் சிதறி விழுந்தன. சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் இருந்த வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், பலர் பதறி ஓடியது, தரையில் தூசிமேகம் பரவியது. இந்த சம்பவத்தை நேரில் கண்ட நபர்  “ஓடுகள் விழும் ஒலி ஒரு முதல் இரண்டு நிமிடங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது ” என  கூறினார்.  நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது சிறப்பான விஷயம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“>

 

இந்த கோபுரம் 1995ஆம் ஆண்டு மீண்டும் கட்டப்பட்டது. 2023ஆம் ஆண்டு ஒரு புதிய மறுசீரமைப்பு தொடங்கி, 2024 மார்ச் மாதம் தான் முடிக்கப்பட்டது. ஆனால் தற்போது இடிந்த பகுதி அந்த மறுசீரமைக்கப்பட்ட கூரை பகுதியாக இருக்கிறது.

இதனால் கட்டுமானத் தரம் குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. “மூலக் கட்டிடம் 650 ஆண்டுகள் தாங்கி வந்தது, ஆனால் நவீன புதுப்பிப்பு ஒரு வருடத்திலேயே சிதறிவிட்டது” என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.