
காவிரியில் இருந்து கர்நாடகா எவ்வளவு நீர் திறந்து விட வேண்டும் என்பதைக் குறித்து ஆணையத்துக்கு காவேரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும் ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகா தமிழகத்துக்கு நீர் திறந்து விடுகிறதா என்பதையும் கண்காணித்து வருகிறது. காவேரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி காவேரி மேலாண்மை ஆணையமும் காவேரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 40 ஆவது கூட்டம் நடைபெற்றது. அப்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவேரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்து விட வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரையும், ஜூலை மாதத்திற்கு திறந்து விட வேண்டிய 31.24 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.