உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள  ஹர்தோயி மாவட்டத்தில் காதல் சம்பந்தமாக  இளைஞருக்கு நேர்ந்த கொடூரமான அனுபவம். சிதாபூரைச் சேர்ந்த அதுல் காஷ்யப் (25), கடந்த 5 மாதங்களாக லோனார் காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு பெண்ணுடன் பழகிய வந்துள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து கடந்த மே 21 ஆம் தேதி அந்தப் பெண்தனது  குடும்பத்தினரிடம் அறிமுகம் செய்து வைப்பதாக கூறி அதுலை அழைத்துள்ளார். ஆனால் கிராமத்திற்கு  சென்றதும் அதுல் பயங்கரமாக சிக்கினார்.

அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், அதுலை நிர்வாணமாக்கி கயிறால் கட்டி வைத்து, கம்பிகளாலும் குச்சிகளாலும் அடித்துள்ளனர். மேலும்   அவரை கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்ததோடு, வெந்நீரை உடலில் ஊற்றி கொடுமை செய்துள்ளனர் என்றும் அதுல் கூறுகிறார். அவரது பிறப்புறுப்பில் ஹாமரால் அடித்ததாகவும் கூறியுள்ளார். இது குறித்து வீடியோ ஒன்றில்  அதுல் அந்த சம்பவத்தைக் கதறி விவரித்துள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் அதுலை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரின் உடலெங்கும் அடிக்கப்பட்ட அடையாளங்கள் காணப்படுகின்றன. தற்போது அதுல் உடல்நிலை தேறிவருவதாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர்  தெரிவித்ததாவது, “தகவல் வந்தவுடன் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு புகாரும் பெறப்படவில்லை. புகார் வந்தவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி, மக்களின் ஆவேசத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.