பெங்களூரு புறநகரில் உள்ள பழைய சந்தாபுரம் ரயில்வே பாலம் அருகே ஒரு சூட்கேஸ் கிடந்ததை  பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சூட்கேஸை ஓடும் ரயிலில் இருந்து வீசி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது ஒரு இளம் பெண்ணின் உடல் இருந்தது.

அந்த இளம் பெண்ணை வேறு ஒரு இடத்தில் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து ஓடும் ரயிலில் இருந்து வீசி சென்றதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணின் பெயர், வயது, அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.