தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண்கள் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மாயாண்டி என்பவர் திடீரென அங்கு வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண்களிடம் ஆபாச சைகை காட்டியுள்ளார். இது குறித்து பெண்கள் தங்களது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த உறவினர்களும் பொதுமக்களும் சேர்ந்து மாயாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மாயாண்டிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாயாண்டியை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாயாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.