
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் டீ குடிக்கச் சென்றபோது, லாரியை மர்ம நபர் திருடி சென்றார்.
அப்போது மகேந்திரா சிட்டி சிக்னலில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் முருகன், லாரியில் ஏற முயன்று 13 கி.மீ. தொங்கியபடி சென்றார். ஏராளமான வாகன ஓட்டிகளும் லாரியை பின் தொடர்ந்து சென்றனர்.
மறைமலைநகர் சிக்னல் அருகே லாரியை போலீசார் மடக்கிக் பிடித்தனர். பின்னர் போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.