திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சென்று கொண்டிருந்த ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மரத்தின் மீது மோதியதில் பயங்கர விபத்து  ஏற்பட்டு காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மௌனா ஷெரின் என்ற 11 வயது சிறுமி மட்டும் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இறந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.