
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தை சேர்ந்த இயற்கை மருத்துவ நிபுணரும், கிரையோபிராக்டிக் மருத்துவத்தை மேற்கொள்பவருமான டாக்டர் ராபர்ட் ஜி. டிபீஸ் ஒரு அதிர்ச்சிகாரமான வீடியோவை மே 15ம் தேதி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். “நல்ல உணவுடன் நலம்பெறு… போலியான பாஸ்ட் ஃபுட் உணவுகளை தவிர்த்து விடுங்கள்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோவில் அவர் கூறியதாவது: “McDonald’s இல் வாங்கிய பர்கர் மற்றும் Papa John’s பீட்சாவை என் டேபிளில் 62 நாட்கள் வைத்திருந்தேன். சில நாள்களுக்கு ஒரு முறை நான் அதை புகைப்படம் எடுத்தேன். என்ன நடந்தது தெரியுமா? எதுவும் இல்லை. பூஞ்சை வளரவில்லை, அழுகவும் இல்லை. அதன் மேல் பகுதி மிகவும் கடினமாக மாறியது.
View this post on Instagram
“இந்த உணவு கெட்டு போகவில்லை… இது உங்களை பயமுறுத்த வேண்டிய விஷயம்!”. பிரிசர்வேட்டிவ் கலந்த பாஸ்ட் ஃபுட் உணவுகள் உங்களுக்குத் தீங்கு தரும்!. McDonald’s போன்ற பாஸ்ட் ஃபுட் உணவுகளில் calcium propionate, BHA, TBHQ போன்ற பாதுகாப்புப் பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகின்றன. இது உணவின் ஆயுளை நீட்டிக்கும். ஆனால் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த வேதிப்பொருட்கள் பின்வரும் உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்:
ஹார்மோன் கோளாறுகள்
குடல் நல குறைபாடுகள்
உடலில் வீக்கம்
எடை அதிகரிப்பு மற்றும் இன்சுலின் எதிர்ப்பு
தானாக ஏற்படும் நோய்கள் (Autoimmune) தீவிரமாகும்
“உணவு அழியவில்லை என்றால், அது உடலுக்குள் சென்று சீராக ஜீரணமாகுமா?” என்ற கேள்வியுடன் டாக்டர் டிபீஸ் முடிக்கிறார். “பொய்யான உணவுகளை விலக்குங்கள்… இயற்கையான உணவுகளுடன் உங்கள் உடலை நலமாக்குங்கள்!” என்று வலியுறுத்தியுள்ளார். இதனை உலகம் முழுவதும் எண்ணற்ற நெட்டிசன்கள் கவனித்து, உணவுப் பழக்கங்களில் மாற்றம் தேவை என கருத்து தெரிவித்து வருகின்றனர்.