விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவின் நிறுத்தி சோதனை செய்தபோது கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் கஞ்சாவை கடத்திய கணேசன் என்பவரையும், அவரது தாயையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர் இது குறித்து வழக்கு பதிவு செய்த ஒரு சார் அவர்களிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து அந்த கஞ்சாவை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.