உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வின் கீழ் விசாரிக்கப்பட்டது.

அதனை முழுமையாக விசாரித்த நீதிபதி, மாவட்ட நீதிபதியாக இருந்து அல்லது வழக்கறிஞர்களாக இருந்து உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டாலும், ஓய்வு பெற்ற அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் வேறுபாடு இன்றி “ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்” என்ற கொள்கை பொருந்தும் என உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஆணைகள், உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ரூபாய் 15 லட்சம் ஓர் ஆண்டுக்கு ஓய்வூதியமாக கொடுக்க வேண்டும்.உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூபாய் 13.6 லட்சம் ஓய்வூதியம் கொடுக்கப்பட வேண்டும்.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியில் இருக்கும் போதே இறந்தாலோ அல்லது கூடுதல் பொறுப்பில் இருந்தாலும் அவரது மனைவி அல்லது வாரிசுதாரர்களுக்கு மத்திய அரசு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.