
முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உத்திரவிட கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக மரங்களை வெட்ட அனுமதி கோரிய தமிழக அரசு விண்ணப்பத்தை கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பராமரிப்பு பொருட்களைக் கொண்டு செல்ல ஏதுவாக கேரளா அரசு சாலையை செப்பனிடவும் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அதோடு மரங்களை வெட்ட 4 வாரத்தில் அனுமதி வழங்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கேரள அரசே வல்லகடவு சாலையை சீரமைக்க வேண்டும் என்றும், படகு ஒன்றையும் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. எஞ்சிய பிரச்சினைகள் குறித்து முடிவு செய்ய அணியின் மேற்பார்வை குழு உடனடியாக கூடி 4 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த பணிகள் நடைபெறும் பொது தமிழ்நாடு அரசு உடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.