
மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அருகே ரயில்வே பணியின் போது அசம்பாவிதம் நடந்துள்ளது. காரைக்கால் – பேரளம் பாதையில் நாளை ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருந்த நிலையில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி தூக்கி வீசப்பட்டார்.
படுகாயமடைந்த இளைஞர் காரைக்கால் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.