
தெலுங்கானாவில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள படலப் பள்ளியில் பிரசாத் (14) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11), ரவிக்கிரண். இவர்கள் மூவரும் நேற்று அங்குள்ள புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் அருகில் உள்ள மாம்பழத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது மின்னல் தாக்கியதில் பிரசாத் மற்றும் யஷ்வந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரவிக்கிரண் படுகாயம் அடைந்து சுயநினைவை இழந்தார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ரவிக்கிரனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதேபோன்று காமிரெட்டி மாவட்டத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது நண்பர் மகேஷ். இருவரும் நேற்று ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதில் இடி தாக்கியதில் சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.