
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியை சேர்ந்த 35 வயது திருமணமான பெண், ஒரு வலைத்தள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான மதுராஜா (35), ராணுவத்தில் மிசோரம் மாநிலத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றி வருகிறார்.
விடுமுறை காரணமாக மதுராஜா ஊருக்கு வந்த போது, 2023-ம் ஆண்டு அந்தப் பெண் கட்டிய புதிய வீட்டின் பூஜை விழாவில் கலந்து கொண்டிருந்தார். அப்போது குளியலறையில் ரகசிய கேமரா ஒன்றை மையமாக பொருத்தி, அந்த பெண்ணை ரகசியமாக வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து மதுராஜா பணிக்காக மீண்டும் மிசோரம் சென்றுள்ளார். ஆனால், அந்த கேமரா அவரது செல்போனுடன் இணையப்பட்டிருந்ததால், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அந்த பெண்ணின் குளியல் காட்சிகளை ரகசியமாக பார்த்து ரசித்துள்ளார்.
சமீபத்தில் ஊருக்கு வந்த மதுராஜா, அந்த பெண்ணை சந்தித்து, தன்னுடன் உல்லாசமாக இருக்காவிட்டால், நிர்வாணமாக குளிக்கும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
ஆனால் பெண் அதற்கு மறுப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மதுராஜா தனது நண்பர்களிடம் அந்த புகைப்படங்களை காண்பித்துள்ளார். இது அந்த பெண்ணுக்கு அதிக மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போலீசார் மதுராஜாவை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பிறகு, அவரை நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஒரு ராணுவ அதிகாரி, பெண்ணின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி இவ்வாறு செயற்பட்டது மிக மோசமான குற்றமாக கருதப்படுகிறது.