
சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வரும் வீடியோ ஒன்றில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரிட்டனி என்ற பெண் ஒரு சீட்டாவுடன் நேரடியாக நேருக்கு நேர் சந்திக்கிறார். “Brittany F” என்ற பயனரால் இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 47 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் சீட்டாவுடன் அமர்ந்திருந்த பிரிட்டனி, ஆரம்பத்தில் அமைதியாக விலங்குடன் பழகுகிறாள். ஆனால் சீட்டா திடீரென எழுந்து அவளது அருகில் வந்ததும், பரபரப்பு தொடங்கியது. அதிர்ச்சியில் உறைந்தபோதிலும், சீட்டா தாக்கவில்லை; அது நடந்து சென்று பிறகு மற்றொரு இடத்தில் அமர்ந்தது.
View this post on Instagram
இந்த வீடியோவில், “my life flashed before my eyes” என்ற வாசகம் வீடியோவில் காட்டப்படுகிறது, அதனால் அந்த தருணத்தில் பிரிட்டனியின் பயம் தெளிவாக முகத்தில் தெரிகிறது. இருப்பினும் பிரிட்டனி மீண்டும் தைரியமாக சீட்டாவுடன் உட்கார்ந்து செல்ஃபி எடுத்தார். இந்த வீடியோ, அவரது அனுபவம் எவ்வளவு திடுக்கிட வைத்தது என்பதை தெளிவாக காட்டுகிறது. சிறிது நேரத்தில் அமைதியான சூழல், எதிர்பாராத வகையில் மாற்றமடைந்து அதிர்ச்சியூட்டும் காட்சியாக மாறியுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.