
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை புத்தகத்தை எழுதிய நிலையில் இதன் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தற்போது பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்த ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது,
புதிய கல்விக் கொள்கை எனும் ‘மத யானை’என்று புதிய கல்விக் கொள்கை பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு புத்தகம்.. தமிழக கல்வி அமைச்சராலேயே வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு நல்ல திட்டத்தை பற்றி விஷம் கக்கப்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்… தமிழகப் பெற்றோரே. வேதனையுடன் இங்கே பதிவு செய்கிறேன்.. மதம் பிடித்த யானையை போன்ற ஒரு தமிழக ஆட்சி அதிகார வர்க்கம்… மக்கள் வாக்களித்து விட்டார்கள் எங்களை யாரும் கேட்க முடியாது என்ற ஆணவப் போக்கில்… தன் குழந்தைகள் பெரும் அறிவை சாமானிய குழந்தைகள் பெற்று விடக்கூடாது என்ற கொடூர புத்தியினால்… தங்களின் அரசியல் அதிகாரத்தினால். தமிழக குழந்தைகள் எந்த வகையில் முன்னேறிக் கூட கூடாது என்ற நோக்கில் வெளியிடப்பட்டிருக்கின்ற புத்தகம்…
என் மகன் பிரெஞ்சு படிக்கலாம்.. ஆனால் தமிழகத்தின் மற்ற பிஞ்சுகள் இன்னொரு மொழியை பற்றி சிந்திக்கவே முடியாது… சிறப்பு படிப்பு என்றால் எங்கள் குடும்பத்திற்கு தான் இருக்க வேண்டும் என்று ஆணவப் போக்கு… தாங்கள் நினைத்தால்.. தங்கள் அரசியல் வாழ்விற்காக.. தமிழக மாணவ மாணவிகள் நாங்கள் என்ன நினைக்கிறோமோ. அதைத்தான் படிக்க வேண்டும் என்ற அதிகாரப் போக்கு தான் இதில் தெரிகிறது… காவி கொள்கையை உள்ளே புகுத்துவதற்காக. அந்தக் கொள்கையை உடையவர்கள் தான் இந்தக் கல்விக் கொள்கையை உருவாக்கினார்கள் என்ற பெரிய பொய்யை சொல்லி இருக்கிறார்கள்… மரியாதைக்குரிய கஸ்தூரி ரங்கன். குழுவில். நம் இந்திய குழந்தைகள் உலக அரங்கில் உயர வேண்டும் என்ற காரணத்திற்காக. உருவான குழுவில் சிறந்த கல்வி கொள்கையாளர்கள் இருந்தார்கள் தவிர காவி கொள்கையாளர்கள் இல்லை…
தமிழக குழந்தைகள் ஒரு அளவிற்கு மேல் வளரவே கூடாது என்ற நோக்கத்தோடு மதயானை போல அன்பில் பொய்யாமொழி தமிழக குழந்தைகளை அடக்கி ஆள்வது இந்த புத்தகத்தின் நோக்கம்… கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குவதற்கு. அடித்தளம் அமைத்தவர்
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்… அதிலிருந்து கல்வி எல்லா விதத்திலும் முன்னேறி வருகிறது.. ஆனால் அதற்கு உரிமை கொண்டாடும் திமுக… கேந்திரிய வித்யாலயாவில். தமிழ் படிப்பது தங்களின் தேர்வாக இருக்கும் பட்சத்தில் அங்கே தமிழ் ஆசிரியர்கள் இல்லை. என்று கொக்கரித்துக் கொண்டிருந்த கூட்டம் இன்று அரசு பள்ளியில் மதுரையில் தமிழ் ஆசிரியர் இல்லை என்ற காரணத்திற்காக தமிழில் மாணவர்கள் தோல்வியடைந்து இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது…
புதிய கல்விக் கொள்கை எனும் ‘மத யானை’என்று புதிய கல்விக் கொள்கை பற்றிய ஒரு தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஒரு புத்தகம்.. தமிழக கல்வி அமைச்சராலேயே வெளியிடப்பட்டிருக்கிறது..
ஒரு நல்ல திட்டத்தை பற்றி விஷம் கக்கப்பட்டு இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்… தமிழகப்… pic.twitter.com/Nt3i6OL8wB— Dr Tamilisai Soundararajan (@DrTamilisai4BJP) May 18, 2025
இப்படித்தான் இவர்களது கல்வி கொள்கை இருக்கிறது… இங்கு பேசியவர்கள் எல்லாம் நாங்கள் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று பெருமைப்படுகிறோம் என்று சொல்கிறார்களே தவிர தமிழ் குடும்பத்தைச் சார்ந்த பெருமை யாருக்கும் இல்லை… அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் இந்த மாநிலத்தை விட புதுச்சேரியில் அதிகமாகவே இருக்க.. தமிழ் தமிழ் என்று சொல்லிவிட்டு தமிழுக்கு எவ்வளவு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியான பத்தாவது தேர்ச்சி விகிதத்தை கவனித்தால் தமிழகத்தில் தேர்வானவர்களில் 8 லட்சத்து 17 ஆயிரத்து 183 பேர் இதில் எட்டு மாணவர்கள் மட்டுமே தமிழில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறார்கள்.. ஆனால் 346 பேர் ஆங்கிலத்தில் 100க்கு நூறு வாங்கியிருக்கிறார்…
மாநிலத்தில் முதன்மை பெற்றவர்கள் யாரும் தமிழில் 100க்கு 100 வாங்கவில்லை… இது எதை காட்டுகிறது… தமிழ் என்று சொல்லி தமிழக மக்களை இவர்கள் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத்தான் காண்பிக்கிறது… கல்வியில் எந்த புதிய பரிமாணமும் வந்து விடக்கூடாது… நாங்கள் சொல்வதைத்தான் தமிழக மாணவர்கள் படிக்க வேண்டும். அவர்களுக்கு என்று விருப்பு இருந்து விடக்கூடாது.. ஏழை குழந்தைகள் எந்த விதத்திலும் ஏற்றம் பெற விடக்கூடாது என்ற ஆணவப் போக்கில் வெளியிடப்பட்ட புத்தகம். மனவேதனையுடன் சொல்கிறேன்..
இரண்டு மாநில ஆளுநராக பிற மாநிலத்தின் கல்வித் திட்டத்தை பார்த்து விட்டு தான் சொல்கிறேன்…நேற்று 10ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியே வரும்போது சொல்லப்பட்டது மற்ற மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக இருக்கிறது என்று தமிழக மாணவர்கள் சிறப்பாக இருக்கிறார்களே தவிர தமிழக அரசு தமிழை முன்னிறுத்தவில்லை. இதைச் சொன்னால் உடனே என்னை விமர்சிப்பார்கள் இன்று கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வருகிறோம் என்கிறார்.
முதல்வர் மத்தியில் ஆட்சியில் இருக்கும் போது ஏன் கொண்டு வரவில்லை? தமிழகத்தில் தான் ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு கல்வி செல்வந்தர் வீட்டு குழந்தைகளுக்கு ஒரு கல்வி என்ற வேறுபாடு அதிகமாக இருக்கிறது. இந்தப் பாகுபாடை தீர்க்க வந்ததுதான் புதிய கல்விக் கொள்கை ஆனால் புதிய மாற்றம் தமிழகத்தில் வந்து விடக்கூடாது என்பதற்காக வெளியிடப்பட்டதே இந்த மத யானை என்பதே என் மன வேதனை என்று பதிவிட்டுள்ளார்.