சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோ மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் தந்தையின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதாவது ஒரு குழந்தை சாப்பிட்டு கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த குரங்கு உணவை பறித்துக் கொண்டது. அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்த நிலையில் தந்தை குழந்தைக்கு உதவி செய்யாமல் அதனை வீடியோவாக எடுத்துக் கொண்டிருந்தார். குழந்தையின் அருகில் இருந்த ஒரு பெண்மணி குழந்தை அழுகிறது உதவுங்கள் என்று கூற அந்த தந்தையோ எதுவும் செய்யாது அப்படியே உட்காருங்க எனக் கூறுகிறார்.

 

இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் குழந்தை அழுது கொண்டிருக்க பக்கத்திலிருந்து குரங்கு ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் அந்த தந்தை உதவி செய்யாமல் அதனை வீடியோ எடுத்த நிலையில் ஏதாவது விபரீதமாக நடந்திருந்தால் என்ன செய்ய முடியும் என பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில் சமூக ஊடகப் புகழுக்காக இப்படி குழந்தையின் உயிரை ஆபத்தில் ஆழ்த்துவது சரியல்ல என்பதும் பலரது கருத்தாக அமைந்துள்ளது.