நேற்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த கிருத்திகா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.

கடந்த 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் கிருத்திகாவின் அண்ணன் சுனில் 600 க்கு 597 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்தார். கிருத்திகாவும் சுனிலும் ஒரே பள்ளியில் படித்தனர்.

இருவருமே அதிக மதிப்பெண்கள் எடுத்து மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்ததால் பள்ளி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதே பள்ளியைச் சேர்ந்த ஓவியா என்ற மாணவி பத்தாம் வகுப்பில் 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 2-வது இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.