
கடந்த 2023 ஆம் ஆண்டு இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,139 இஸ்ரேலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதோடு 251 பேரை ஹமாஸ் அமைப்பினர் காசாவிற்கு பணய கைதிகளாக பிடித்து சென்றனர். இதனால் இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட சில பணய கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் கடத்திச் செல்லப்பட்டவர்களில் 25 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹமாஸ் அமைப்பினர் பணய கைதிகளை முழுமையாக விடுவிக்கும் வரையில் தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் கூறியுள்ள நிலையில் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக நடந்து வரும் இந்த தாக்குதலில் இதுவரை சுமார் 53 ஆயிரத்து 10 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த ஒரு தாக்குதலில் காசாவில் குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.