
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள ஆதித்யாபூர் நகரில் நடந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாக்பேடாவைச் சேர்ந்த ராஜேந்திர மார்டியின் மனைவி சீதா மார்டி, தனது நான்கு குழந்தைகளையும் விட்டு ஒரு வருடத்திற்கு முன்பு குலுபதங்கா பகுதியில் உள்ள ரித்தேஷ் பிருவா (போலா) என்பவருடன் காதல் உறவில் வாழ்ந்து வந்தார். குழந்தைகளை கணவனிடம் விட்டுவிட்டு காதலனுடன் வாழ்ந்தார். இதனால் மனமுடைந்த ராஜேந்திரன், பலமுறை குழந்தைகளை அழைத்துச் செல்ல முயன்றும், போலா அவர்களை அடித்து விரட்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு ராஜேந்திரன் கோடரி எடுத்துக்கொண்டு போலாவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது போலா மற்றும் சீதா இருவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது ராஜேந்திரன், இருவரையும் தாக்கியதில் போலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சீதா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல் நிலைய பொறுப்பாளர் வினய் குமார் சிங் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலோவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ராஜேந்திரனை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணை முடிவுகள், இது திட்டமிட்ட கொலை என உறுதி செய்கின்றன. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.