உலகம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சி கணிசமாக முன்னேறி வருகிறது. அதன் ஒரு முக்கிய சாதனையாக, ஸ்லோவாக்கியாவை தலைமையிடமாகக் கொண்ட கிளைன் விஷன் நிறுவனம் உருவாக்கி வரும் ஏர்கார் எனப்படும் பறக்கும் கார், 2026-இல் வணிக உற்பத்திக்கு வந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் கார், சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு வணிக உற்பத்தியில் அறிமுகமாகும் முதல் வகை காராகும். இது நவீன தொழில்நுட்பத்தின் முக்கியமான மைல்கல்லாக கருதப்படுகிறது.

ஏர்கார் சிறப்பம்சங்கள்:

விலை: 8 லட்சம் டாலர் முதல் 10 லட்சம் (1 மில்லியன்) டாலர் வரை

கார் முதல் விமானம் மாறும் நேரம்: 90 வினாடிகள்

விமான வேகம்: 155 mph

பறக்கும் உயரம்: 10,000 அடி

வானில் பயண தூரம்: 620 மைல்கள்

சாலை வேகம்: 124 mph

சாலையில் பயண தூரம்: 497 மைல்கள்

இருக்கைகள்: 2 பேர்

இந்த ஏர்கார், 2022-இல் பறக்கும் விமானமாக சான்றிதழ் பெற்றது. இதுவரை 170 மணிநேரங்கள் பறத்தல் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பறக்கும் மற்றும் தரையிறங்கும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

கார் மற்றும் விமானம் ஆகிய இரண்டிலும் செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஏர்கார், மடிக்கக்கூடிய இறக்கைகள், வால் மற்றும் பாதுகாப்பு பாராசூட் வசதியுடன் வருகிறது. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

கிளைன் விஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டெபன் கிளைன், “பறக்க விரும்பும் ஆசையை பொதுமக்களின் கைகளில் கொண்டு வருவது என் வாழ்நாள் கனவு” என தெரிவித்துள்ளார்.

இந்த ஏர்கார் தொழில்நுட்ப உலகில் புதிய போக்குவரத்து புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், துபாயில் பறக்கும் கார் திட்டமும் விரைவில் அறிமுகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.