தமிழக பாஜக கட்சியின் சார்பில் ஆபரேஷன் சிந்துர் வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று திருப்பூரில் வெற்றி பேரணி நடைபெற்றது. இதற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். அதன் பிறகு நடைபெற்ற கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் நிர்வாகிகளிடம் பேசினார். அவர் பேசியதாவது, காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்தது ஒரு விபத்து கிடையாது.

இது தீவிரவாதிகளின் திட்டமிட்ட ஒரு சதி. இதற்காக நாம் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை பழி சொல்ல முடியாது. இந்த சமுதாயத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே பூகம்பத்தை உருவாக்கிவிட்டு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கம் சென்றுள்ளது.

பிரதமர் மோடி 12 நாட்களாக விரதம் இருப்பது போல் பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். இந்த தாக்குதலின் போது பாகிஸ்தானில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில் தான் ஆப்ரேஷன் சிந்துர் என்று பெயர் வைத்தார்.

பிரதமர் மோடியை பொறுத்தவரையில் அன்புக்கு அன்பு, ரத்தத்திற்கு ரத்தம், பழிக்கு பழி வாங்க வேண்டும் என்பதற்காக நம்முடைய தேசத்தை இழந்து விட முடியுமா.? இதனால்தான் 100 கிலோமீட்டர் தாண்டி பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மற்றும் லாகூர் விமானம் தளத்தை நொறுக்கினார்கள். பயங்கரவாதம் மற்றும் அதை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ அத்தனை பேரையும் அடித்து நொறுக்குவேன் என்பதற்காகத்தான் பிரதமர் மோடி நாடு நாடாக சென்றார்.

அனைவரும் தேச உணர்வோடு இருக்க வேண்டும் இல்லை எனில் பாகிஸ்தானுக்கு சென்று விடுங்கள். உங்களுக்கு பாகிஸ்தானை பற்றி தெரியுமா.? காங்கிரஸ் மாநில முதல்வர் பாகிஸ்தானை அழிக்க வேண்டும் என்று கூறும் நிலையில் இங்குள்ள முதல்வர் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். மேலும் அவரிடம் எந்தவிதமான பதிலும் இல்லை என்று கூறினார்.