
இந்தியா பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத உள்ளன. இன்னும் 13 லீப் போட்டி உட்பட 17 ஆட்டங்கள் உள்ளன.
இதில் சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறிவிட்டது. இருப்பினும் வருங்காலத்தில் அணியை உருவாக்கும் நோக்கில் சென்னை அணி நிர்வாகம் களமிறங்கி உள்ளது. முன்னதாக நடப்பு சீசனின் தொடக்க ஆட்டத்தில் சில போட்டிகளில் விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் எலும்பு முறிவு காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
அவருக்கு மாற்று வீரராக மும்பையைச் சேர்ந்த 17 வயது இளம் வீரரான ஆயுஷ் மாத்ரேவை சென்னை அணி சேர்த்தது. அந்த வகையில் சிறப்பாக விளையாடி வரும் ஆயுஷ் நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 163 ரன்களை எடுத்துள்ளார். இதனால் அவர் சென்னை அணியின் வருங்கால நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார். இந்நிலையில் சென்னை அணியில் தான் தேர்வானது எப்படி என்பது குறித்து ஆய்வு கூறியுள்ளார்.
இது குறித்த அவர் கூறியதாவது, சிஎஸ்கே உன்னை எதிர்பார்க்கிறது. அணியின் தரப்பில் இருந்து அழைப்பார்கள் தயாராக இரு என சூரியகுமார் யாதவ் தான் முதலில் எனக்கு சொன்னார். நான் மனதளவில் தயாராக இருந்தேன். அதன் பிறகு ஸ்ரீகாந்த் சார் என்னிடம் நீங்கள் இங்கே 2 நாட்கள் சென்னை பயிற்சி முகாமுக்கு வரவேண்டும். நாங்கள் உங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். சென்னை அணியின் ஒரு பகுதியாக இருக்கப் போவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறினார்.