கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஒரு குப்பை கிடங்கில் கல்லூரி மாணவனின் சடலம் கடந்த 11ஆம் தேதி மீட்கப்பட்டது. கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் அந்த மாணவனின் சடலம் கிடந்த நிலையில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்டது அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்ற 21 வயது வாலிபர் என்பது தெரிய வந்தது.

இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் தன்னுடைய நண்பன் கார்த்திக் (21) என்பவரலு காதலியுடன் செல்போனில் பேசி பழகிய நிலையில் அவர்களுடைய காதலை முறித்துவிட்டு அந்த பெண்ணை இவர் காதலிக்க ஆரம்பித்துள்ளார்.

சூர்யாவும் அந்த பெண்ணும் காதலிப்பது கார்த்திக்குக்கு தெரிய வந்த நிலையில் அவர் மிகவும் கோபம் கொண்டு தன்னுடைய நண்பர்களான நரேன் கார்த்திக் (21), முகமது ரபி (21), மாதேஷ் (21) ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அவர்கள் திட்டமிட்டபடி சூர்யாவை கொலை செய்த உடலை கொண்டு வீசியது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர்கள் நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் முதலில் சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் ஒரே கல்லூரியில் படித்த நிலையில் பின்னர் வெவ்வேறு கல்லூரிகளில் படிக்க சென்றுவிட்ட நிலையில் தன் காதலியை பிரித்ததால் சூர்யாவுக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்து போதை ஊசி செலுத்தியுள்ளனர்.

பின்னர் தலையணையை வைத்து அவரை அமுக்கி கொலை செய்த நிலையில் பிணத்தை எப்படி அகற்றுவது என தெரியாமல் மது போதையில் பிணத்துடனே நால்வரும் படுத்து தூங்கியுள்ளனர். இதைத்தொடர்ந்து அதிகாலை நேரத்தில் காரில் பிணத்தை ஏற்றி வந்து ஒரு இடத்தில் வீசி சென்றது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.