
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(52). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு பெற்றோர் திட்டியதால் 9-ஆம் வகுப்பு மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஜாபர் சாதிக் ஆசை வார்த்தைகள் கூறி அந்த மாணவியை தன்னுடன் அழைத்து சென்று தங்க வைத்தார். இதனையடுத்து பல்வேறு ஊர்களுக்கு சென்று விடுதியில் தங்கி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதற்கிடையே தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தேடுவதை அறிந்ததும் ஜாபர் சாதிக் மாணவியை ஒப்படைத்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த ஜாபர் சாதிக் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். நேற்று முன்தினம் நண்பரை பார்க்க வந்த இடத்தில் ஜாபர் சாதிக்கை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.