
சென்னை மாவட்டம் புது வண்ணாரப்பேட்டையில் 19 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சென்னை துறைமுகம் மற்றும் கப்பர் கூட தொழிலாளர் விடுதலை முன்னணி தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளரான நன்மாறன்(63) என்பவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தார்.
பின்னர் அவர் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நன்மாறனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.