
ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கானல் அருகே புது குடியனூர் பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். விவசாயக் கூலியான இவருக்கு திருமணம் ஆகி கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக புவனேஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டரை வயதில் சஷ்மிதா என்ற பெண் குழந்தை இருக்கிறது.
இதில் புவனேஸ்வரிக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் விஜய் என்ற வாலிபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் புவனேஸ்வரி தன் கணவனை பிரிந்து தாய் வீட்டில் கிட்டத்தட்ட 9 மாதங்களாக வசித்து வந்தார். இந்நிலையில் புவனேஸ்வரி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது பாலுவுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் கோபமடைந்த பாலு தன் மாமியார் வீட்டிற்கு சென்று புவனேஸ்வரி அரிவாளால் வெட்ட முயன்றார். உடனே அவரது தாய் புவனேஸ்வரியை வீட்டை விட்டு ஓடி விடுமாறு கூறி கதவை சாத்திவிட்டார்.
இதனால் தன் மாமியார் பார்வதியை அவர் கத்தியால் குத்தி கொலை செய்த நிலையில் பின்னர் விஜயின் தாய் தந்தையான ராஜேஸ்வரி மற்றும் அண்ணாமலை ஆகியோரையும் அவர் இரும்புராடால் அடித்து கொலை செய்தார். மேலும் பாலுவை காவல்துறையினர் கைது செய்த நிலையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.