
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் சீதாராம். இவரது மகன் ஜெகதீஷ். கடந்த 8- ஆம் தேதி ஜெகதீஷுக்கு உமா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு மறுநாள் அன்னவரத்தில் இருக்கும் கோவிலுக்கு குடும்பத்தினர் சாமி கும்பிடுவதற்காக சென்றனர்.
அன்று இரவே அனைவரும் வீடு திரும்பினார்கள். ஜெகதீஷ் தனது நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதற்காக கடந்த 10-ஆம் தேதி நண்பர்கள் 5 பேருடன் கோட்னபில்லிக்கு பகுதியில் இருக்கும் குவாரிக்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் மது குடித்தனர்.
அப்போது ஜெகதீஷ் குவாரியில் தேங்கி இருந்த தண்ணீரில் இறங்கி குளித்தார். போதையில் இருந்த மற்ற நண்பர்கள் அதை கவனிக்காமல் வீட்டிற்கு சென்றனர். நீண்ட நேரமாகியும் ஜகதீஷ் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் நண்பர்களை தொடர்பு கொண்டு கேட்டனர்.
அப்போது ஜெகதீஷ் குளித்துவிட்டு முன்னதாகவே கிளம்பி விட்டதாக நண்பர்கள் தெரிவித்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் குவாரிக்கு சென்று பார்த்தனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு 11ஆம் தேதி ஜெகதீஷ் சடலமாக மீட்கப்பட்டார்.
தண்ணீரில் மூழ்கி ஜெகதீஷ் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.