மத்திய கிழக்கு நாடுகளுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் கத்தார் அரச குடும்பத்தினரிடம் இருந்து ஆடம்பரமான போயிங் 747-8 ஜம்போ ஜெட் விமானத்தை அவர் பரிசாக பெற உள்ளார். இந்த விமான பாதுகாப்பு அச்சுறுத்தலை கொண்டிருக்கலாம் என்று ஊகங்கள் எழுந்தது. இந்நிலையில் டிரம்ப் அதை நிராகரித்துள்ளார். இதனை ஏற்றுக் கொள்வதை அவர் நியாயப்படுத்தி உள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசி அவர் கூறியதாவது, இப்படிப்பட்ட சலுகையை ஒருபோதும் நான் மறுக்க மாட்டேன். இலவசமாக இருக்கும்போது வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு நான் என்ன முட்டாளா? என்று தெரிவித்தார். பதவி காலம் முடிந்ததும் தனிப்பட்ட முறையில் இந்த விமானத்தை பயன்படுத்துவாரா? என்று கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது, எதிர் காலத்தில் இந்த விமானம் அதிபர் நூலக அருங்காட்சியத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த விமானம் பறக்கும் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இதில் அதிக வசதிகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அந்த விமானத்தில் ஆடம்பர வசதி கொண்ட படுக்கையறை, ஓய்வறை, கூட்டம் நடைபெறும் வரை, பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட குளியல் அறைகள் மற்றும் ஒரு பெரிய படிக்கட்டு ஆகியவை உள்ளது. அதிபர் டிரம்புக்காக விமானத்தில் தேவையான சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 3413 கோடி என்று கூறப்படுகிறது.