
விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசு காவல்துறை ராணுவம் உள்ளிட்ட படை பிரிவுகளில் கௌரவ பொறுப்பை வழங்கி விளையாட்டு வீரர்களை கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களான சச்சின், தோனி உள்ளிட்ட வீரர்கள் இந்திய ராணுவத்தில் கௌரவ பொறுப்புகளை வகித்து வருகிறார்.
அதன்படி இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20, ஒருநாள் போட்டி, சாம்பியன்ஸ் உலகக்கோப்பை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி ராணுவத்தில் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு ராணுவத்தில், லெப்டினன்ட் கர்னல் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சேர்ந்து தோனி பணியாற்றினார்.
இதேபோன்ற சிறப்பு பயிற்சிகளை மேற்கொண்ட தோனி பாராசூட் வீரராக உள்ளார். இவர்கள் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, பேரிடர் காலத்திலும் ராணுவத்துடன் சேர்ந்து பணியாற்றுவார்கள். இதற்கிடையில் ராணுவத்தில் பணியாற்றிய தோனிக்கு என்ன சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் தோனிக்கு சம்பளம் ரூ. 1.21 லட்சம் முதல் ரூ. 2.12 லட்சம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய ராணுவத்தில் தோனியின் ரேங்கில் உள்ளவர்களுக்கு இந்த அளவு சம்பளம் தான் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கௌரவ பதவியில் இருக்கும் தோனி இந்த சம்பளத்தை பெற முடியாது. ஏனென்றால் அவர்கள் சேவை அதிகாரிகள் அல்ல. அவர்கள் ராணுவத்திற்காக கடமைகள் எதையும் செய்வதில்லை என்பதால் அவர்களுக்கு சம்பளமோ அல்லது கௌரவ ஊதியமா வழங்குவது கிடையாது.
பிரபலங்களுக்கு இது போன்ற கவுரவு பதவிகளை அளிப்பதன் மூலம் பொதுமக்கள் ஆயுதப்படைகள் மீதும் கவனம் செலுத்துவதற்காக இது போன்று செய்யப்படுகிறது.