
சென்னை மாவட்டத்தில் ஒரு மாணவி பயோமெடிக்கல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவரது நெருங்கிய நண்பரான அஜய் இன்டர்ன்ஷிப் பயிற்சி அளிப்பதாக கூறி மாணவியை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு பெண்கள் விடுதியில் தங்கி இருத்த மாணவியிடம் அஜய், எனது நெருங்கிய நண்பரான ஹரி நம்மை விருந்துக்கு அழைத்துள்ளதாக கூறியுள்ளார். இதனை நம்பி மாணவி அஜயுடன் சென்றார். அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அஜயும், ஹரியும் சேர்ந்து மாணவிய கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.