தமிழகத்தில் மார்ச் 3-ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கடந்த 8-ம் தேதி ரிசல்ட் வெளியானது. தமிழகம் முழுவதும் 95.03 சதவீதம் தேர்ச்சி விகிதம் பதிவாகி இருந்தது. இதில் மாணவர்கள் 93.16 சதவீதமும், மாணவிகள் 96.70 சதவீதமும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்தவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்திருந்த நிலையில் இன்று முதல் அதற்கு விண்ணப்பிக்கலாம்.

அதன்படி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அரசு தேர்வுகள் இயக்க சேவை மையங்களிலும் இன்று முதல் மே 31ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று தற்போது பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உரிய காலகட்டத்திற்குள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.