சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் நேற்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை படைத்தவர்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாட தொடங்கியவர். இதுவரை 123 போட்டிகளில் விளையாடி 9, 230 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். மேலும் 68 டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு, அதில் 40 போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து டெல்லி ரஞ்சி அணியின் பயிற்சியாளர் சரந்திப் சிங் பேட்டி ஒன்றில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் கூறியதாவது, டெல்லி அணிக்காக விராட் கோலி நானும் ஒரு ஆஸ்திரேலியா தொடரில் விளையாடிய போது இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கு தீவிரமாக தயாராக முடிவெடுத்திருப்பதாக விராட் கோலி தன்னிடம் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் விராட் கோலியுடன் நான் சில வாரங்களுக்கு முன்பு பேசினேன். அப்போது இங்கிலாந்து தொடருக்கு தயாராகி வருவதாகவும் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இருப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா ஏ போட்டியில் பங்கு பெற விராட் கோலி முடிவு எடுத்திருந்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து தொடரை போலவே தற்போதும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்து இருந்தார் ஆனால் தற்பொழுது என்ன நடந்தது என தெரியவில்லை. ஏன் இந்த முடிவை மேற்கொண்டுள்ளார் எனப் புரியவில்லை. இவ்வாறு சரந்திப் சிங் கூறியுள்ளார். தற்போது இவரது கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது.