காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனால் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில் இதனை இந்தியா தடுத்து நிறுத்தியதோடு பாகிஸ்தானுக்கு பதிலடியும் கொடுத்தது. கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடந்து வந்த போர் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்நிலையில் சீனாவில் இருந்து ஒரு விமானம் மூலமாக பாகிஸ்தானுக்கு போர் ஆயுதங்கள் வந்ததாக ஒரு செய்தி பரவி வருகிறது.

ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் போர் நிறுத்தம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் தங்களுக்கு உதவி செய்தது சீனா தான் என்றும் எப்போதும் தங்களுடைய நம்பிக்கையான நண்பனாக சீனா இருக்கிறது என்றும் அவர்களுக்கு நன்றி கடன் பட்டுள்ளோம் வேண்டும் கூறியிருந்தார். போரை முடிக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்திய நிலையில் சீனா பாகிஸ்தானுக்கு போர் ஆயுதங்களை வழங்கியதாக வந்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக தற்போது சீனா விளக்கம் கொடுத்துள்ளது. இது பற்றி சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் பாகிஸ்தானுக்கு ஒய் 20 என்ற சரக்கு விமானம் மூலமாக ஆயுதங்கள் அனுப்பியதாக வந்த செய்திகளில் உண்மை கிடையாது.

ராணுவம் தொடர்பாக வதந்திகளை பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சீனா ஆசியாவில் அமைதியை விரும்பும் நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான இடையே ஏற்பட்ட சண்டையை நிறுத்துவதிலும் ஆக்கபூர்வமாக பங்காற்றியுள்ளது. எனவே இது போன்ற போலியான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று பதிவிடப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக சீனாவை சேர்ந்த டேப்லாய்டு குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிகை நிறுவனம் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியாவின் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக போலி செய்திகளை வெளியிட்ட நிலையில் இதற்கு மத்திய அரசாங்கம் கடும் எச்சரிக்கை விடுத்தருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.