சென்னை மாவட்டம் புத்தகரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சென்னையில் இயங்கும் தனியார் வங்கியின் ஏடிஎம்-களில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முருகன் வீட்டில் இருந்தபோது அவரது தாய் வெளியே சென்று விட்டு மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார்.

அப்போது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்ததால் நீண்ட நேரமாக கதவை தட்டியுள்ளார். இருப்பினும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினரlரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது தனது மகன் படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முருகன் ஆன்லைன் சூதாட்டத்தில் 6 லட்ச ரூபாய் வரை பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.