அனந்தபூர் மாவட்டம், அஜய் அஹுஜா நகரில் மே 8ஆம் தேதி இரவு 9 மணியளவில் நடந்த துயரமான விபத்து, மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது வீதியில் அமர்ந்திருந்த இந்திரா பாய் (வயது 55) மற்றும் அருகில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் மீது  ஒரே நேரத்தில் வேகமாக வந்த கார் ஒன்று மோதியது. இந்நிலையில்  மிதிவண்டியின் சங்கிலி அறுந்ததால் அதனை சரிசெய்துக் கொண்டிருந்த இந்திரா பாய் அருகில் பக்கத்து வீட்டு குழந்தைகள் நின்று கொண்டிருந்தனர்.

அந்த கார் அனைவர் மீது மோதி சுமார் 10 அடி தூரம் இழுத்துச் சென்றதாக சிசிடிவி காட்சிகள் உறுதி செய்கின்றன. விபத்து காயமடைந்த இந்திரா பாய், யாஷிகா (11) மற்றும் விவான் (7) ஆகியோரை உடனடியாக விஞ்ஞான் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். யாஷிகாவிற்கு தலையில் காயம், ஐந்து மணி நேர அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. இந்திரா பாய்க்கு தலையில் பலத்த காயம், விவானின் முகப்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.

 

அதே நேரத்தில் பக்கத்து வீட்டில் வசிக்கும் வைஷாலி (8) மற்றும் அனிஷா (10) ஆகிய இரு குழந்தைகளும் காயமடைந்தனர். வைஷாலிக்கு முதுகிலும், கைகளிலும் எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன, அனிஷாவுக்கு கைகளிலும் கால்களிலும் காயங்கள் உள்ளன. வீதியில் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து காரை ஓட்டிய நபரை பிடித்து தாக்கியதுடன், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். விபத்து தொடர்பான முழு தகவல்களும் பதிவு செய்யப்பட்டு, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.