சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் முதியதம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சூரமங்கலம் பகுதியில் பாஸ்கரன் (70)-வித்யா (65) தம்பதியினர் தனியாக இருப்பதை அறிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வீட்டிற்குள் புகுந்து அவர்களை சுத்தியலால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு வார காலமாக அவர்களை நோட்டமிட்ட சந்தோஷ் நேரம் பார்த்து வீட்டுக்குள் நுழைந்து அவர்களை கொலை செய்துவிட்டு 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இவர் கடன் தொல்லை காரணமாக தம்பதியை அடித்து கொலை செய்துவிட்டு நகைகளை திருடியதாக கூறியுள்ளார். இவரை போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருகிறது.