பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்தனர். விழா தொடக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பிறகு பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, என்னுடைய அண்ணன் காடுவெட்டி குரு இந்த மாநாட்டில் இல்லை என்பது மிகப்பெரிய வருத்தம்.

இந்தியாவில் நம்முடைய சமூகத்திற்கு மட்டும்தான் வரலாற்று புராணம் உள்ளது. தமிழகத்தில் இது போன்ற மாநாட்டை எந்த கட்சியும் நடத்தியது கிடையாது. தந்தை பெரியாரின் உண்மையான வாரிசு ஆனைமுத்து தான். மண்டல் கமிஷனை வர வைத்தவர் அவர்தான். நம்முடைய முன்னோர்களுடைய பெருமை நமக்கு தெரியவில்லை. தேர்தலுக்காக அரசியலுக்காக நாம் கூடவில்லை. நம் உரிமைக்காக கூடியுள்ளோம் என கூறியுள்ளார்.