
அன்று இந்தியா எடுத்த தைரியமான முடிவால் இன்று பாகிஸ்தானின் பயங்கர தாக்குதலை எளிமையாக இந்தியா சமாளித்துள்ளது.
ரஷ்யாவுடன் ஒப்பந்தம் :
- 2018-ல் இந்தியா, ரஷியாவிடம் இருந்து S-400 ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம் வாங்க ஒப்பந்தம் செய்தது
- டீல் விலை: $5.4 பில்லியன் (சுமார் ரூ. 40,000 கோடி)
- S-400 என்பது ரஷியாவின் மிகப்பெரிய ஏர்ட் டிஃபென்ஸ் சிஸ்டம்
S-400 என்ன?
- விமானங்கள், மிசைல்கள், ட்ரோன்கள் எல்லாவற்றையும் வானத்தில் சுட்டு வீழ்த்தும் சிஸ்டம்
- 400 கி.மீ. தூரம் வரை இலக்குகளை தேடி அழிக்க முடியும்
- உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம்களில் ஒன்று
- முக்கியமாக சீனாவை எதிர்க்கும் நோக்கத்தில்தான் இந்தியா இதை வாங்கியது.
CAATSA – அமெரிக்காவின் தடை சட்டம்
- CAATSA = Countering America’s Adversaries Through Sanctions Act
- அமெரிக்கா இந்த சட்டத்தை 2017-ல் கொண்டு வந்தது
- இதன் படி அமெரிக்க எதிரி நாடுகளான ரஷியா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளோடு ராணுவ டீல் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா கடும் தண்டனை விதிக்கிறது.
- இந்தியா ரஷியாவிடம் இருந்து S-400 வாங்கும் முன் தகவலறிந்த அமெரிக்க , இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டால் CAATSA மூலம் பொருளாதர தடை விதிக்கப்படும் என எச்சரித்தது.
CAATSA-வால் வரக்கூடிய தண்டனைகள்
- US டாலர் டிரான்ஸாக்ஷன்கள் தடை விதிக்கப்படும்
- US Tech, Defence Equipment வாங்க முடியாத நிலை ஏற்படும்
- இந்திய அரசு / நிறுவனங்கள் / மக்களின் US ல் உள்ள சொத்துகள் ப்ளாக் (Freeze) செய்யப்படும்.
- IMF/World Bank/US loan, economic support நிறுத்தப்படும்
அமெரிக்காவிடமிருந்து தப்பிய இந்தியா
- 2022-ல் US Congress சட்ட திருத்தம் கொண்டு வந்து, இந்தியாவுக்கு விலக்கு வழங்கியது
- இந்தியா சீனாவை எதிர்க்க நமக்கிருக்கும் ஒரு முக்கியமான நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- QUAD (India, US, Japan, Australia) கூட்டணியிலும் இந்தியா முக்கியமான பங்காற்றுகிறது.
இந்தியாவின் மாஸ்டர் பிளான் :
- ரஷ்யாவிடம் இந்த S 400 வாங்கியதன் மூலம் இன்று பாதுகாப்பில் மேம்பட்ட நாடக இந்தியா இருக்கிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலில் இருந்து நம்மை காப்பாற்றியுள்ளது.
- அதே சமயம் அமெரிக்காவோடு நட்பு வளர்த்து சக்திவாய்ந்த கூட்டணி வைத்திருக்கிறது.