ஆதார் அட்டை என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. ஆதார் அரசின் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், எந்த ஒரு அரசு சம்பந்தப்பட்ட, தனிமனித ஆவணங்களை பெறுவதற்கும் ஆதார் முதன்மையாக தேவைப்படுகிறது.

இதுபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் ஆதார் பெரும் உதவியாக உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தீனதயாள் ஊனமுற்றோர் மறுவாழ்வு திட்டம்.

இந்தத் திட்டத்தின் கீழ் மன இறுக்கம், மனநல பாதிப்பு, பெருமூளை வாதம் மற்றும் பல குறைபாடுகள் உள்ளவர்களுக்கு மலிவு விலையில் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது.

இது போன்ற ஊனமுற்றோர்களுக்கான உயர்தர கல்வி உதவித் தொகை, ஐ.ஐ.டி, ஐ.ஏ.எஸ் மற்றும் என்.ஐ.டி  போன்ற உயர் கல்வி நிலையங்களில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ படிப்பதற்காக முழு நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த ஸ்காலர்ஷிப் மற்றும் மருத்துவ காப்பீடு போன்ற பயனுள்ள திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் முழுவதுமாக பயன்படுத்திக் கொள்ள மிக முக்கியமான ஆவணமாக தேவைப்படுவது ஆதார் கார்டு ஆகும்.